தமிழைப் பயிரிடுதல் Tamil farming

தமிழ் ஒரு மொழி
இது உலகில் முதன்மையான உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்று. ஒரு வகையில் முதன்மையானது.
இது நம் தாய்மொழி.

எந்த மொழியும் பேசும் மக்களால் மட்டுமே வாழும்.
தமிழ் வாழத் தமிழ் பேசப்பட வேண்டும்.
தமிழ் எழுத்தில் எழுதப்பட வேண்டும்.
இது படிக்கப்பட வேண்டும்.

நெல் பயிரிட்டு விளையும் நெல்லை உணவாக்கிக் கொள்கிறோம்.
அப்படித்தான் தமிழைப் பயிரிட்டு அதன் விளைச்சலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் நூல்கள் மூவாயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் விளைச்சலைப் பயன்படுத்திக் கொள்வோர் பெருக வேண்டும்.
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் அவற்றால் ஈடுகொடுக்க முடியாதுதான். ஆனால் பண்பியல் பாதையில் தமிழ்நூல்களுக்கு இணையான பிறமொழி நூல்கள் இல்லை. பண்பாடுதான் மாந்தர் இனத்தை வளர்க்கும்.

இணையப் பதிவில் தமிழ் ஏற்றம் பெற்றுவருகிறது.

  • தமிழ்மொழி மரபில் எழுதுவதுதான் தமிழ். 
  • பேசும் கொச்சைத் தமிழைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவது நெல்லையும் புல்லையும் சேர்த்து வளர்ப்பது போன்றது. 
  • தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதினால் தமிழும் வளராது; ஆங்கிலமும் வளராது.
மரபுத் தமிழில் எழுதுவதைப் படிப்பவர் எண்ணிக்கை பெருக வேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம்?



Comments

Popular posts from this blog

தமிழ் படிக்கும் தகைமையாளர்கள் 28 03 2017